திண்டுக்கல் கோபால்நகரில் சேதமான சாலைக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்
திண்டுக்கல் கோபால்நகரில் சேதமான சாலைக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோபால்நகர் விஸ்தரிப்பு பகுதியில் பேவர்பிளாக் சாலை சேதம் அடைந்துவிட்டது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் அரபுமுகமது தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது சேதம் அடைந்த சாலைக்கு மலர் வளையம் வைத்து, சங்கு ஊதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆசாத், ஜானகி, கிளை செயலாளர் ஜான்போர்ஜியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story