தியாகதுருகம் ஒன்றியத்தில் வாக்குப்பெட்டியை திறக்க முடியாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

தியாகதுருகம் ஒன்றியத்தில் வாக்குப்பெட்டியை திறக்க முடியாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்
x
தினத்தந்தி 12 Oct 2021 11:29 PM IST (Updated: 12 Oct 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் ஒன்றியத்தில் வாக்குப்பெட்டியை திறக்க முடியாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

தியாகதுருகம்

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பெட்டிகள் இருந்த அறையில் இருந்து 4 பெட்டிகளை எடுத்து வாக்குகள் பிரிக்கும் அறைக்கு ஊழியர்கள் எடுத்து வந்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டிகளில் உள்ள சீலை அகற்றி பெட்டியை திறந்து அதன் உள்ளே இருந்த வாக்குச்சீட்டுகளை கீழே கொட்டினர். 

இதில் பீளமேடு ஊராட்சியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டியை திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் என்னசெய்வதென்று அறியாமல் தவித்தனர். பின்னர் வேட்பாளரின் முகவர் ஒருவர் சிறிய கல்லை எடுத்து வந்து அதன் மூலம் வாக்குப்பெட்டியை திறந்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக நடைபெற்றது.

Next Story