ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் சம வாக்குகள் பெற்ற 4 வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் வருகிற 16 ந் தேதி தேர்வு

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில்  சம வாக்குகள் பெற்ற 4 வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் வருகிற 16 ந் தேதி தேர்வு
x
தினத்தந்தி 12 Oct 2021 11:42 PM IST (Updated: 12 Oct 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் சம வாக்குகள் பெற்ற 4 வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் வருகிற 16 ந் தேதி தேர்வு

கண்டாச்சிமங்கலம்

தியாதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சித்தலூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் அலமேலு, சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட ராஜேந்திரன் தலா 82 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர்.

அதேபோல் வடதொரசலூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ராணி, சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட நிர்மலா ஆகியோர் தலா 169 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர். 4 வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்று இருந்ததால் யார் வெற்றியாளர் என்பதை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வருகிற 16-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் குலுக்கல் நடத்தி வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். 

Next Story