மாவட்ட செய்திகள்

4 வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர் + "||" + Voter who voted for 4 candidates

4 வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்

4 வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்
ஒரெ வாக்குச்சீட்டில் 4 வேட்பாளர்களுக்கு வேட்பாளா் வாக்களித்தாா்.
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டில் வாக்காளர் ஒருவர், வாக்குச்சீட்டில் மொத்தமுள்ள 6 சின்னங்களில், 4 சின்னத்துக்கு தனது வாக்கை பதிவு செய்துள்ளார். அந்த வாக்காளர் விவரம் அறியாமல் 4 பதவிகளுக்கு என நினைத்து 4 சின்னங்களில் வாக்களித்தாரா அல்லது வேண்டுமென்றே அதிருப்தியில் இதுபோன்று வாக்களித்தாரா என்பது தெரியவில்லை. இந்த வாக்குச்சீட்டு தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டில் வாக்காளர் ஒருவர் மொத்தமுள்ள 4 சின்னங்களில் 3 சின்னத்தில் முத்திரை பதித்து வாக்கு செலுத்தி உள்ளார். இதனால் அந்த வாக்கு செல்லாத வாக்காக அறிவக்கப்பட்டது.