அரக்கோணத்தில் காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்


அரக்கோணத்தில்  காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்
x
தினத்தந்தி 13 Oct 2021 12:34 AM IST (Updated: 13 Oct 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

அரக்கோணம்
அரக்கோணத்தில் காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

அரக்கோணம் ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியல் கல்லூரியில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணும் பணி 9.15 மணி வரை தொடங்கப்படவில்லை. 10.30 மணி வரையிலும் வாக்கு  ெண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. இதனால் அறைகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து விட்டோம். இது வரை காலை உணவு வழங்கவில்லை. எங்களில் சிலருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது.தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பதால் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே உடனடியாக உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அரக்கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

Next Story