மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் பலி + "||" + real estate executives killed

பள்ளத்தில் கார் கவிழ்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் பலி

பள்ளத்தில் கார் கவிழ்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் பலி
அரவக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்தவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அரவக்குறிச்சி,
ரியல் எஸ்டேட் அதிபர்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் சிவராஜா (வயது 48). இவர் புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளராக இருந்தார். இவரும் காஞ்சீபுரம் கிழக்கு ரங்கநாதபுரம் பலராமன் என்பவரது மகன் டெல்லி (45), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். 
இவர்கள் 3 பேரும் ஒரே காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சிவராஜா ஓட்டினார்.
2 பேர் பலி
நேற்று மதியம் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே பொன்னாகவுண்டனூர் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து ஒரு பாறை மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சிவராஜா, மனோகரன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 
தீவிர சிகிச்சை
படுகாயம் அடைந்த டெல்லியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.