மாவட்ட செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Youth Suicide by hanging

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆலங்குளத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காந்தி நகரை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் அருள் பாண்டியன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய தாயார் செல்வி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். 

இதையடுத்து அருள்பாண்டியன் தனது தந்தை, சகோதரன் முத்துராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக தாய் செல்வியின் நினைவு வரவே அருள் பாண்டியன் மனமுடைந்து காணப்பட்டார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை துரைப்பாண்டி தனது மகனை எழுப்புவதற்காக அவரது அறைக்கு சென்றார். அப்போது அங்கு அருள் பாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அருள்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தாயார் இறந்த வேதனையில் அருள் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செந்தூர் அருகே சலூன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. ராணுவ வீரர் தற்கொலை
தேனியில் முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
அரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஒட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.