மாவட்ட செய்திகள்

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது + "||" + Worker arrested for cutting wife with scythe

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

பாளையங்கோட்டை மேல பாலாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 57). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (42).
இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி நெஞ்சக பிரிவில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியம்மாள் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிச்சையா, மாரியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சையாவை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.