ஜோலார்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் பாமகவினர் வாக்குவாதம்
ஜோலார்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை ஒன்றிய வாக்கு எண்ணிக்கை அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்று. 22 மேசைகளில் வாக்கு எண்ணப்பட்டது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களை மட்டும் அனைத்து மேசைகளிலும் அனுமதிக்கபடுகின்றனர் எனவும், பா.மக.வினர் 8 மேசைகளில் மட்டும் அனுமதிக்கபட்டுள்ளனர் என கூறி அவர்கள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளை நிற பாஸ் வைத்திருக்கும் ஏஜெண்டுகளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story