மாவட்ட செய்திகள்

முதியவர் விஷம் குடித்து சாவு + "||" + The old man drank poison and died

முதியவர் விஷம் குடித்து சாவு

முதியவர் விஷம் குடித்து சாவு
சிவகிரி அருகே முதியவர் விஷம் குடித்து இறந்தார்.
சிவகிரி:

சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்சாமி (வயது 70). இவர் கடந்த ஓராண்டு காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் கவனிக்க ஆள் இல்லாமல் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் மதியம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்சாமி இறந்தார். தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய மகள் வேலம்மாள் சிவகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து பெண் சாவு
சிவகிரியில் விஷம் குடித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கல்லிடைக்குறிச்சியில் தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.
3. முடிதிருத்தும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே முடிதிருத்தும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. நெல்லை அருகே கொரோனா பயத்தில் விஷம் குடித்த முதியவர் சாவு
நெல்லை அருகே கொரோனா பயத்தில் விஷம் குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. விஷம் குடித்து மூதாட்டி சாவு
பாளையங்கோட்டையில் விஷம் குடித்து மூதாட்டி இறந்தார்.