3 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 3 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
திருச்சி, அக்.13-
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 3 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
இடைத்தேர்தல்
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு மற்றும் துறையூர் ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
பிற்பகல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தி.மு.க. கைப்பற்றியது
அதன்படி, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றி வெற்றி கண்டது. வையம்பட்டி 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மொத்த ஓட்டுகள் 4,656. பதிவான வாக்குகள் 3,682. செல்லத்தக்க வாக்குகள் 3,648. செல்லாத வாக்குகள் 34. வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த பெண் வேட்பாளர் ப.செல்லமணி 1,872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வேட்பாளர் ரா.ஜானகி 1,670 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்குகள் வித்தியாசம் 202. தே.மு.தி.க. வேட்பாளர் ராஜகுமாரி-46, சுயேச்சை வேட்பாளர்கள் ராஜம்மாள்-23, சந்திரா-37 வாக்குகள் பெற்று தோல்வி இழந்ததுடன் டெபாசிட் தொகையும் இழந்தனர்.
மருங்காபுரி
மருங்காபுரி 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மொத்த ஓட்டுகள் 5,880. பதிவான வாக்குகள் 3,948. செல்லத்தக்க வாக்குகள் 3,922. செல்லாத வாக்குகள்26. வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த பெண் வேட்பாளர் சபியுன்நிஷா 2,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வேட்பாளர் கனகவள்ளி 1,628 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்குகள் வித்தியாசம் 521. தே.மு.தி.க. வேட்பாளர் ஷகிலாபானு-35, சுயேச்சை வேட்பாளர்கள் முடியரசி-15, ஜெயலட்சுமி-24, கிரசண்ட் பேகம், -30, குழந்தையம்மாள்-41 வாக்குகள் பெற்று தோல்வி இழந்ததுடன் டெபாசிட் தொகையும் இழந்தனர்.
துறையூர்
துறையூர் ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டு (பொது) மொத்த வாக்காளர்கள் 4,867. பதிவான வாக்குகள் 3,898. செல்லத்தக்க வாக்குகள் 3,843. செல்லாதவை 55. தி.மு.க. வேட்பாளர் வை.முருகேசன் 2,570 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வேட்பாளர் சே.அபிராமி 1,156 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்குவித்தியாசம் 1414. தே.மு.தி.க. வேட்பாளர் மனோகர்-72., சுயேச்சைகள் மகேஸ்வரன்-21, கலைச்செல்வன் -18, லலிதா-6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததுடன் டெபாசிட் தொகையையும் இழந்தனர். இந்த நிலையில் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story