பணம் பறித்த 2 பேர் கைது


பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2021 1:35 AM IST (Updated: 13 Oct 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 37). இவர் சிவகாசி-செங்கமலபட்டி ரோட்டில் தனது மோட்டார் சைக்களில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (31), குருசாமி (55) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனிடம் இருந்து ரூ.290-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரஞ்சித்குமார், குருசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story