மாவட்ட செய்திகள்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றுகிறது + "||" + dmk to form gudiyatham panchayat union captures

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றுகிறது

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றுகிறது
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தை கைப்பற்றுகிறது.
குடியாத்தம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தை கைப்பற்றுகிறது.

வாக்கு எண்ணிக்கை

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கே.எம்.ஜி. கல்லூரியில் நடந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேர், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஒருவர், சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.

தி.மு.க. கைப்பற்றுகிறது

"பெரும்பாலான ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். இந்த முன்னணி நிலவரப்படி குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றுகிறது என்றே கூறலாம்.
காலையில் வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இரவு 11 மணி அளவில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கினர். இதனால் மிகவும் தாமதமாக சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்றதாக வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
பல மணி நேரம் காத்திருந்தும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கவில்லை என அதிகாரிகளை வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து ஓரிரு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.