மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 10:03 PM GMT (Updated: 12 Oct 2021 10:03 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்:
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. எனவே  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று காலை முதல் வினாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 
   மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82.92 அடியாக இருந்தது.

Next Story