கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x
தினத்தந்தி 13 Oct 2021 4:16 AM IST (Updated: 13 Oct 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானது. முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவியை நிர்மலா கைப்பற்றினார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானது. முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவியை நிர்மலா கைப்பற்றினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பதவியிடங்களுக்கான 2-வது கட்ட தேர்தல் கடந்த 9-ந் தேதி நடந்தது. குமரி மாவட்டத்தில் முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், பஞ்சாயத்து வார்டுகளான மகாராஜபுரம் 2-வது வார்டு, லீபுரம் 4-வது வார்டு, பறக்கை 8-வது வார்டு, திக்கணங்கோடு 6-வது வார்டு, ஆத்திவிளை 3-வது வார்டு, குமரன்குடி 1-வது வார்டு, சூழால் 1-வது வார்டு, வெள்ளாங்கோடு 5-வது வார்டு ஆகிய 8 வார்டுகளுக்கும் இந்த தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 5 பேரும், 8 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 30 பேரும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 17 ஆயிரத்து 231 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக முட்டம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு 20 வாக்குச்சாவடிகளும், வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 8 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடைபெற்றது. 
குமரி மாவட்டத்தில் மந்தமான வாக்குப்பதிவாக இருந்தது. மொத்தம் உள்ள 17 ஆயிரத்து 231 வாக்குகளில் காலையில் இருந்து மாலை வரை 9128 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதற்கான வாக்குப்பதிவு சதவீதம் 52.97 ஆகும். இதில் முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மட்டும் 6239 வாக்குகள் பதிவாகி இருந்தது.
வாக்கு எண்ணிக்கை
இந்தநிலையில் நேற்று காலையில் குருந்தங்கோடு, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், தக்கலை, திருவட்டார், முன்சிறை, மேல்புறம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முட்டம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடந்தது. மற்ற பஞ்சாயத்து வார்டுகளுக்கான ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி 9.30 மணிக்குள் முடிவடைந்தது. 
தேர்தல் முடிவுகள் விவரம் வருமாறு:-
முட்டம் பஞ்சாயத்து  தலைவர்
குருந்தங்கோடு ஒன்றியம் முட்டம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மொத்தம் 7 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் நிர்மலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 12,947
பதிவான வாக்குகள்- 6239.
செல்லாத வாக்குகள்- 61
நிர்மலாபெற்ற வாக்குகள் - 2326
நிர்மலாவுக்கு அடுத்தபடியாக மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட வதனா நிஷா 2275 வாக்குகள் பெற்றார். நிர்மலா 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியான அனிதா வழங்கினார். பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்மலாவின் கணவர் ராஜ் 9-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
குமரி மாவட்டத்தில் நடந்த 8 பஞ்சாயத்து வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
மகாராஜபுரம்
அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் மகாராஜபுரம் 2-வது வார்டில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட சுயம்பு வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 203
பதிவான வாக்குகள்- 168
செல்லாத வாக்குகள்- 2
சுயம்பு பெற்ற வாக்குகள்- 100
சுயம்புக்கு அடுத்தபடியாக கார் சின்னத்தில் போட்டியிட்ட ஞானமணி 53 வாக்குகள் பெற்றார்.
லீபுரம்
அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் 4-வது வார்டில் திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெகன் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 759
பதிவான வாக்குகள்- 457
செல்லாத வாக்குகள்- 4
ஜெகன் பெற்ற வாக்குகள்- 230
இவருக்கு அடுத்தபடியாக சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட லீன் 181 வாக்குகள் பெற்றார்.
பறக்கை
ராஜாக்கமங்கலம் ஒன்றியம் பறக்கை 8-வது வார்டில் திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட ஞானதிசான் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 305
பதிவான வாக்குகள்- 234
செல்லாத வாக்குகள்- 1
ஞானதிசான் பெற்ற வாக்குகள்- 142
இவரை எதிர்த்து சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட சுயம்புலிங்கம் 91 வாக்குகள் பெற்றிருந்தார்.
ஆத்திவிளை
தக்கலை ஒன்றியம் ஆத்திவிளை 3-வது வார்டில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட மத்தியாஸ் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 416
பதிவான வாக்குகள்- 274
செல்லாத வாக்குகள்- 9
மத்தியாஸ் பெற்ற வாக்குகள்- 123
இவருக்கு அடுத்தபடியாக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட நிஷாந்த் 57 வாக்குகள் பெற்றார்.
திக்கணங்கோடு
தக்கலை ஒன்றியம் திக்கணங்கோடு 6-வது வார்டில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட இந்திரா ராணி வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 818
பதிவான வாக்குகள்- 523
செல்லாத வாக்குகள்- 5
இந்திரா ராணி பெற்ற வாக்குகள்- 269
இவருக்கு அடுத்தபடியாக சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட சிவகுமாரி 164 வாக்குகள் பெற்றார்.
குமரன்குடி
திருவட்டார் ஒன்றியம் குமரன்குடி 1-வது வார்டில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட லிபின் வினோஸ் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 569
பதிவான வாக்குகள்- 401
செல்லாத வாக்குகள்- 2
லிபின் வினோஸ் பெற்ற வாக்குகள்- 176
இவருக்கு அடுத்தபடியாக கார் சின்னத்தில் போட்டியிட்ட சசிகுமார் 122 வாக்குகள் பெற்றார்.
சூழால்
முன்சிறை ஒன்றியம் சூழால் 1-வது வார்டில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட விஜயகுமார் வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 397
பதிவான வாக்குகள்- 314
செல்லாத வாக்குகள்- 4
விஜயகுமார் பெற்ற வாக்குகள்- 97
இவருக்கு அடுத்தபடியாக கார் சின்னத்தில் போட்டியிட்ட லாரன்ஸ் 96 வாக்குகள் பெற்றார்.
வெள்ளாங்கோடு
மேல்புறம் ஒன்றியம் வௌ்ளாங்கோடு 5-வது வார்டில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட அஜிதாகுமாரி வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள் - 817
பதிவான வாக்குகள்- 518
செல்லாத வாக்குகள்- 6
அஜிதாகுமாரி பெற்ற வாக்குகள்- 164
இவருக்கு அடுத்படியாக திறவுகோல் சின்னத்தில் போட்டியிட்ட கில்டா 132 வாக்குகள் பெற்றார்.

Next Story