5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி- சிவசேனா வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
தக்க பதிலடி
காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார், ராணுவத்தினர் அங்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரத்தம் உறைவதற்குள்...
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் அனுதாபிகளுக்கு தைரியம் வந்து உள்ளது. சமீபகாலமாக அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. காஷ்மீர் பண்டித், பள்ளி ஆசிரியர் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் 1990-களில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டித்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய உணர்வை தருகிறது.
5 இந்திய வீரர்களை கொலை செய்த பயங்கரவாதிகளை சுக்குநூறாக நொறுக்கும் வரை இந்தியர்கள் மனம் அமைதி அடையாது. கொல்லப்பட்ட வீரர்களின் ரத்தம் உறைவதற்குள், 5 பேருக்கு 50 பேர் என பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.............
Related Tags :
Next Story