கடை வீதிகளில் அலைமோதிய பொதுமக்கள்
ஆயுத பூஜை கொண்டாட காங்கேயத்தில் பொருட்கள், மற்றும் பழங்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். பெரிய மாலை ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கேயம்,
ஆயுத பூஜை கொண்டாட காங்கேயத்தில் பொருட்கள், மற்றும் பழங்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். பெரிய மாலை ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆயுத பூஜை
காங்கேயம் பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் லாரி, வேன் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் எப்போதும் ஆயுத பூஜை சிறப்பாக செய்யப்படும். அகாங்கேயத்தில் ஆயுத புஜையை முன்னிட்டு நேற்று பூ மாலைகள் விலை கிடுக்கிடுவென உயர்ந்த்து. செவ்வந்தி பூ மாலைகள் விலை அதிகமாக இருந்தது.
சிறிய மாலையின் விலை ரூ.110 ஆக இருந்தது.அதேபோல இதை விட சற்றே பெரிதான மாலை ரூ.250 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோலவாழை பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது.ப ூஜைக்காக பயன்படுத்தும் பூம் பழத்தின் விலை 16 பழங்கள் கொண்ட ஒரு சீப் பழத்தின் விலை ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.ஒருபழத்தின் விலை ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டது.
வாழைக்கன்று
இதேபோல வாழைக்கன்றுகளும் விற்பனைக்கு ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன.ஒரு ஜோடி சிறிய வாழை கன்றின் விலை ரூ.30 ஆகவும், ஒரு ஜோடி பெரிய வாழை கன்றின் விலை ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடை வீதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story