மாவட்ட செய்திகள்

வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் அழிப்பு + "||" + Destroy in chilly chiken

வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் அழிப்பு

வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன் அழிப்பு
திருப்பூரில் துரித உணவு கடைகளில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் துரித உணவு கடைகளில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்து அழித்தனர். 
கலப்பட டீத்தூள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவி, விஜயராஜா, சிரஞ்சீவி, கேசவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி தெற்கு பகுதி முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், காங்கேயம் ரோடு, பல்லடம், குடிமங்கலம், மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடந்தது. மொத்தம் 37 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 3 கடைகளில் கலப்பட டீத்தூள் கண்டறியப்பட்டு உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 கடைகளில் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. அந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
8 கடைகளில் 26 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அய்வின்போது 5 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. துரித உணவு கடைகளில் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், சில்லி மீன் 4½ கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
உணவு பாக்கெட்டுகளில் சரியான லேபிள் இல்லாததால் 5 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. பண்டிகை காலம் என்பதால் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகள் தனியாக பேக்கிங் செய்து விற்பனை செய்யவும், மற்ற இனிப்பு வகைகளை தனியாக பார்சல் செய்து விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இனிப்பு, கார வகைகள் காலாவதி தேதியை குறிப்பிட்டு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது.