ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையானது மலைப்பாதை ஆகும். இங்கு 14 கொண்டை ஊசி வளைவுகளும், சில மறைமுக வளைவுகளும் உள்ளன. இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் சாலையோர மலைமுகடுகளில் இருந்து கொட்டும் அருவிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம். தற்போது குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், திடீரென தோன்றி உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குறிப்பாக மரப்பாலம் அருகே மலைமுகட்டில் இருந்து கொட்டும் அருவி மலைரெயில் பாலத்தை கடந்து வருவது ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஆனால் அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓரத்தில் நின்று அருவியின் பின்னணியில் புகைப்படம் எடுக்கின்றனர். அப்போது பாலத்தில் இருந்து தவறி விழ வாய்ப்பு உள்ளது. ஒருசிலர் அருவியில் இறங்கி விளையாடுகின்றனர். இதுபோன்ற செயல்களை தடுக்க கல்லாறில் உள்ள சோதனைச்சாவடியில் வனத்துறையினரும், போலீசாரும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
Related Tags :
Next Story