சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக தூத்துக்குடி வாலிபரிடம் ரூ6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 24). இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்து உள்ளது. அதில் பேசியவர் தன்னை சந்தியா என்று அறிமுகம் செய்து உள்ளார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதற்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மன்ஜித்கவுர் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறி உள்ளார். அந்த பணத்தை சண்முகராஜா செலுத்தி உள்ளார். அதனை பெற்றுக்கொண்டவர்கள், சண்முகராஜாவுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.
இது குறித்து சண்முகராஜா தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story