மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில்மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 26 இடங்களில் தி.மு.க. வெற்றி + "||" + DMK in 26 seats Success

விழுப்புரம் மாவட்டத்தில்மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 26 இடங்களில் தி.மு.க. வெற்றி

விழுப்புரம் மாவட்டத்தில்மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 26 இடங்களில் தி.மு.க. வெற்றி
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 26 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்தை கைப்பற்றியது.
விழுப்புரம், 

 விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 28 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தலில் தி.மு.க. 26 இடங்களிலும், அ.தி.மு.க. 24 இடங்களிலும், தே.மு.தி.க. 20 இடங்களிலும், பா.ம.க. 14 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 13 இடங்களிலும், அ.ம.மு.க. 13 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 9 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 2 இடங்களிலும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 55 பேரும் போட்டியிட்டனர். இவற்றில் 23 இடங்களில் தி.மு.க.வும்- அ.தி.மு.க.வும் நேரடியாக தேர்தல் களத்தில் சந்திந்தன.

இதில் தி.மு.க. 26 இடங்களிலும், அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

முகையூர்

வார்டு எண்-13 பிரபு (தி.மு.க.)
வார்டு எண்- 14 ரவிச்சந்திரன் (தி.மு.க.)
வார்டு எண்- 15 ராஜீவ்காந்தி (தி.மு.க.)
திருவெண்ணெய்நல்லூர் 
வார்டு எண்-25 விஸ்வநாதன் (தி.மு.க.)
வார்டு எண்- 26 சந்திரசேகரன் (தி.மு.க.)
காணை 
வார்டு எண்-16 முருகன் (தி.மு.க.)
வார்டு எண்- 17 சிவக்குமார் (தி.மு.க.)
கோலியனூர் 
வார்டு எண்- 23 தமிழ்செல்வி கேசவன் (தி.மு.க.)
வார்டு எண்- 24 வனிதா ஹரிராமன் (தி.மு.க.)
கண்டமங்கலம் 
வார்டு எண்-27 பனிமொழி சீனுசெல்வரங்கம் (தி.மு.க.)
வார்டு எண்- 28 நித்யகல்யாணி (அ.தி.மு.க.)
விக்கிரவாண்டி
வார்டு எண்-18 ஜெயச்சந்திரன் (தி.மு.க.)
வார்டு எண்- 19 மீனா வெங்கடேசன் (தி.மு.க.)
ஒலக்கூர் 
வார்டு எண்- 7 மனோசித்ரா (தி.மு.க.)
வார்டு எண்- 8 எழிலரசி (தி.மு.க.)
மயிலம் 
வார்டு எண்- 5 மகேஸ்வரி (தி.மு.க.)
வார்டு எண்- 6 விஜயன் (தி.மு.க.)
மரக்காணம் 
வார்டு எண்- 9 புஷ்பவள்ளி குப்புராஜ் (தி.மு.க.)
வார்டு எண்- 10 ஷீலாதேவி சேரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
வானூர் 
வார்டு எண்- 20 பிரேமா (தி.மு.க.)
வார்டு எண்- 21 கவுதம் (தி.மு.க.)
வார்டு எண்- 22 அன்புமணி (தி.மு.க.)