திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க. வெற்றி


திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 13 Oct 2021 10:53 PM IST (Updated: 13 Oct 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க.வும், 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தை சுயேச்சை வேட்பாளர் பிடித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க.வும், 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தை சுயேச்சை வேட்பாளர் பிடித்தார்.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விவரம் வருமாறு:-

தி.மு.க. 15 இடங்களில் வெற்றி

வார்டு-1 அ.மஞ்சுளா (அ.தி.மு.க), வார்டு-2, ச.மல்லிகா (தி.மு.க.), வார்ட-3 சீ.யுவராஜ் (அ.தி.மு.க), வார்டு-4 என். அய்யப்பன் (தி.மு.க.), வார்டு-5, எஸ்.தேவி (தி.மு.க.), வார்டு-6 செந்தாமரை (தி.மு.க.), வார்டு-7 இளவரசி (தி.மு.க.), வார்டு-8 அமலோற்பவம் (தி.மு.க.), வார்டு-9 மகாராணி (சுயேச்சை), வார்டு-10 லலிதா (அ.தி.மு.க.), வார்டு-11 ர.கஸ்தூரி (தி.மு.க.), வார்டு-12 டாக்டர் லி.திருப்பதி (அ.தி.மு.க.), வார்டு-13 விஜயா (தி.மு.க.), வார்டு-14 டி.ஆர்.ஞானசேகரன் (தி.மு.க.), வார்டு-15 கலைவாணி (தி.மு.க.), வார்டு-16 அன்பு (அ.தி.மு.க.), வார்டு-17 எம்.ஜி.காந்தி (தி.மு.க.), வார்டு-18 பூங்காவனம் (தி.மு.க.), வார்டு-19 துக்கன் (தி.மு.க.), வார்டு-20 ராமலிங்கம் (தி.மு.க.), வார்டு-21 பிருந்தாவதி (தி.மு.க.).

கைப்பற்றியது

மொத்தமுள்ள உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 15 இடங்களிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தி.மு.க. பெரும்பான்மை பெற்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது.

Next Story