மாவட்ட செய்திகள்

விடிய, விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை8 ஒன்றியங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் + "||" + Details of the winners

விடிய, விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை8 ஒன்றியங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

விடிய, விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை8 ஒன்றியங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய, நடந்த வாக்கு எண்ணிக்கையில் 8 ஒன்றியங்களில் கட்சி வாரியாக வெற்றிபெற்றவர்கள் விவரம் வெளிவந்துள்ளது.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்ற நிலையில், முழுமையான முடிவுகள் நேற்று காலை முதல் தான் வெளிவந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் கட்சி வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

மேல்மலையனூர்

மேல்மலையனூர் ஒன்றியத்தில்  உள்ள 24 வார்டுகளில்  தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 3, பா.ம.க. 2, சுயேச்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அதுபற்றிய விவரம் கட்சிகள் (அடைப்பு குறிக்குள் வார்டு எண்) வாரியாக வருமாறு:-
தி.மு.க. கார்த்திகேயன்(வார்டு2), செல்விரகுபதி(3), சிவசக்தி(5), பெருமாள்(6), சரஸ்வதி(8), விஜயலட்சுமி(9), லட்சுமி(10), சாஹின்பேகம்(11), விஜயகுமார்(13), யசோதா(14), சங்கர்(15), நெடுஞ்செழியன்(16), கண்மணி(17), ஷியாமளா(18), ஜெயலட்சுமி(20), ராஜா(21), கலா(22), காசியம்மாள்(23), ரவிச்சந்திரன் (24) ஆவார்கள். 

 அதேபோல் அ.தி.மு.க. செந்தாமரைகெம்பிரம் (4), பிரியா புண்ணியமூர்த்தி(7), முரளி(19), பா.ம.க. செண்பகம்(12), சுயேச்சை கிருஷ்ணமூர்த்தி(1) ஆவார்கள்.

மயிலம்

மயிலம் ஒன்றியத்தில் 21 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 16 இடங்களிலும், அ.தி.மு.க. 1, சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதுபற்றிய விவரம் கட்சிகள் (அடைப்பு குறிக்குள் வார்டு எண்) வாரியாக வருமாறு:-
தி.மு.க. கோமதி(1), கீதா(2), உமா(4), சாந்தகுமார்(5), சரசு(6), யோகேஸ்வரி(7), ராஜ்பரத்(8), ஜெயந்தி(9), நிவேதிதா(10), கண்ணன்(11), தனட்சுமி(12), அஞ்சலாட்சி(14), புனிதா(15), ஜமுனா ராணி(17), செல்வகுமார்(18), வசந்தா(19), கலா(20) ஆவார்கள்.
அ.தி.மு.க. செல்வம்(13),  சுயேச்சைகள் பரிதா(3), ஜெயந்தி(9) கயல்விழி(16), சுந்தரி(21). ஆவார்கள்.

ஒலக்கூர்

ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 3, பா.ம.க. 2, சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதுபற்றிய விவரம் கட்சிகள் (அடைப்பு குறிக்குள் வார்டு எண்) வாரியாக வருமாறு:-
தி.மு.க. அண்ணாதுரை(1), அன்பரசி(2), சித்ரா (7), சொக்கலிங்கம்(8), ஜனார்த்தனன்(9), ராஜாராம்(13), பத்மாவதி ஆனந்தவேல்(16) ஆவார்கள். 
அ.தி.மு.க. இந்திரா(6), ஜெகதீஸ்வரி(11), சுபலட்சுமி(12), பா.ம.க. அபினேஷ்வரி(3), சிலம்பரசன்(14) மற்றும் சுயேச்சையாக விஜயபாஸ்கர்(4), சுதா(5), பூங்கொடி(10), எழிலரசன்(15) ஆவார்கள்.

வல்லம்

வல்லம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 15 இடங்களிலும், அ.தி.மு.க. 2, பா.ம.க.2, சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கட்சி வாரியாக அவர்கள் விவரம் வருமாறு:-
தி.மு.க. இந்துமதி(2), அமிர்தம்(2), கோமதி(3), ஏழுமலை(6), மலர்விழி(7), பத்மநாபன்(9), அமுதா(10), ஏலக்கன்னி(11), சிலம்பரசி(14), விஜயா(15), பிரேம்சாந்தி(16), ஹம்சலா(17), சாந்துஷ்மேரி(19), ரேணுகா(20), கலைவாணி(21) ஆவார்கள். 
அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன்(4),ஜெயலலிதா(5),, பா.ம.க. பிரபாகரன்(8), கோபால்(18), சுயேச்சைகள் லட்சுமி (12), பக்தவட்சலம்(13) ஆவார்கள். 

செஞ்சி

செஞ்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 24வார்டுகளில் தி.மு.க. 16 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4, பா.ம.க. 1, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் பற்றிய  விவரம் கட்சி வாரியாக வருமாறு:-
தி.மு.க. அன்னம்மாள்(1), டிலைட் ஆரோக்கியராஜ்(3), கேமல்(4), செண்பக பிரியா(5), பச்சையப்பன்(7), புவனா(8), கமலா(9), முரளி(10), பூங்காவனம்(11), சீனிவாசன்(12), ஜெயபாலன்(13), விஜயகுமார்(15), மணி(17), சத்யா (19), உமா மகேஸ்வரி(23), கவிதா(24) ஆவார்கள். 

அ.தி.மு.க. சாவித்ரி(2), துரை(6), ஞானம்பாள் (18), சவிதா(22). பா.ம.க. வை சேர்ந்த கலைவாணி(20), சுயேச்சைகளாக மல்லிகா(14), பனிமலர்(16), அலமேலு(21) ஆவார்கள். 

கோலியனூர் 

கோலியனூர் ஒன்றியத்தில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், பா.ம.க., காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதன் விவரம் கட்சிகள் வாரியாக வருமாறு:-
தி.மு.க. சிட்டிபாபு(1), உதயகுமார்(2), வசந்தா ராமசாமி (3)வசந்தி சந்திரசேகரன்(4), சவுந்தர்ராஜன் (5),  ஜெயலட்சுமி தெய்வசிகாமணி (7), பச்சையம்மாள் (8),  கீர்த்திகா சதீஷ் (9), தேனருவி (10), சிவக்குமார் (12), ஆதிலட்சுமி (13), கிருபாநிதி (15), சச்சிதானந்தம் (16) ஆவார்கள்.
காங்கிரஸ் தேவிவேலு(6), விடுதலை சிறுத்தைகள் கட்சி மஞ்சுளா ஆறுமுகம்(11), ராமதாஸ் (17). 

 முகையூர் 
 முகையூர் ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் தி.மு.க. 16 இடங்களிலும், அ.தி.மு..க 6 இடங்களிலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் விவரம் கட்சி வாரியாக (அடைப்பு குறிக்குள் வார்டு எண்) வருமாறு:-
தி.மு.க. சூரியகலா(3), முத்தம்மாள்(4), சிவமணி(5), மீனாகுமாரி (6), குப்புசாமி(7), மணிகண்டன்(8), ராஜராஜேஸவரி(10), தனலட்சுமி(11), பராசக்தி(12), சுந்தரி(13), அனிதா(14), மணிவண்ணன்(15),சேகர்(17),ஜூலியட்மேரி(19), சிவா(20), சத்தியராஜ்(23) ஆவார்கள்.
அதேபோல் அ.தி.மு.க.வில் செந்தில்குமார்(1), ரேவதி(2), விருத்தாம்பாள்(9),கற்பகம்(16),பூபாலன்(18), முத்துகிருஷ்ணன்(21) மற்றும் சுயேச்சை செந்தாமரை (22) ஆவார்கள்.