குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு


குடியாத்தம்  கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 13 Oct 2021 5:32 PM GMT (Updated: 13 Oct 2021 5:32 PM GMT)

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியாத்தம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையில் நேற்று மாலை நிலவரப்படி 1,500 கன அடி தண்ணீர் வினாடிக்கு வழிந்தோடி வருகிறது. அந்தத் தண்ணீர் ஜிட்டப்பல்லி தடுப்பணை சென்றடைந்து, அங்கிருந்து கவுண்டன்யமகாநதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் பெரும்பாடி பகுதியில் பிரிந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்யமகாநதி ஆற்றிலும் செல்கிறது.

கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக வெள்ளம் செல்வதை காண நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர். அவர்களில் சிலர் தண்ணீரில் இறங்கிய விளையாட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் சென்று பொதுமக்கள் அப்பகுதியில் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக பஸ், லாரி, கார் தவிர்த்து ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் காமராஜர் பாலம் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து ஆற்றங்கரையோரம் இருக்கும் நெல்லூர்பேட்டை, சுண்ணாம்பு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் டாம் டாம் அடித்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story