மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீழ் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்பால காட்சி அளிக்கிறது. மேலும் ஏரி, குளம்போன்ற நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் ஆங்காங்கே தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் நெற்பயிர்கள் முளைத்தும் காணப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story