பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது


பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது
x
தினத்தந்தி 13 Oct 2021 5:47 PM GMT (Updated: 13 Oct 2021 5:47 PM GMT)

சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமேசுவரம்
சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேசுவரத்தில் சிக்கியவர்
ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை அருகே ராஜிவ் நகரை சேர்ந்த இமானுவேல் ராஜா(வயது 43) என்பவர் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து  கியூ பிரிவு மற்றும் கடலோர போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தன்னை சினிமா டைரக்டர் என்றும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்தார். 
பெண்களுடன் உல்லாசம்
போலீசாரின் தீவிர விசாரணையில், அவர் சினிமா டைரக்டர் எனக்கூறி பல பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறித்ததும், பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி ஓட்டல்களுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததும் ெதரியவந்தது. அப்போது அந்த பெண்களுக்கு தெரியாமல் செல்போனில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்துள்ளார். 
தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று 30-க்கும் அதிகமான பெண்களிடம் சினிமா ஆசை காட்டி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த பெண்களை மிரட்டி ஓட்டலுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது. 
துப்பாக்கி பறிமுதல்
இமானுவேல் ராஜாவை போலீசார் கைது செய்தனர். ேமலும் அவரிடமிருந்து டம்மி துப்பாக்கி, 12 ஏ.டி.எம். கார்டுகள், காேசாலை புத்தகம், 3 செல்போன்கள் மற்றும் கவரிங் செயின், தோடு உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  இமானுவேல் ராஜா மீது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நகை திருட்டு வழக்குகள் உள்ளது.
இதனிடையே ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஒருவர் தன் மனைவியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ரூ.1½ லட்சம் பெற்று ஏமாற்றி விட்டதாக இமானுவேல் ராஜா மீது ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் ்புகார் செய்தார். அந்த புகாரின் பேரிலும் இமானுவேல் ராஜா மீது போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story