முளைப்பாரி திருவிழா


முளைப்பாரி திருவிழா
x
தினத்தந்தி 13 Oct 2021 11:17 PM IST (Updated: 13 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

முளைப்பாரி திருவிழா

பரமக்குடி
பரமக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதையொட்டி தற்போதும் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல், வேந்தோணி, மேலாய்க்குடி, பரமக்குடி ஒட்டப்பாலம், பர்மா காலனி, ராம்நகர், புதுக்குடி, கள்ளிக்குடி, மேலகாரடர்ந்தகுடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. அதையொட்டி ஏராளமான ஆண்களும், பெண்களும் முளைப்பாரியை தலையில் சுமந்து வந்து கோவிலில் வைத்து கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர். ஒயிலாட்டம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. அரியனேந்தல் கிராமத்தில் நடந்த முளைப்பாரி திருவிழாவில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயுராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா சிவக்குமார், கிராமத்தலைவர் ராமு, செயலாளர் சௌந்தர பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story