சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு தபால் உறை வெளியீடு


சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு தபால் உறை வெளியீடு
x
தினத்தந்தி 13 Oct 2021 11:46 PM IST (Updated: 13 Oct 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு தபால் உறை வெளியிடப்பட்டது.

வத்தலக்குண்டு: 

வத்தலக்குண்டுவில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தை போற்றும் வகையில், தபால் உறை வெளியீட்டு விழா வத்தலக்குண்டு தபால் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தபால்துறை தென் மண்டல தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தபால் துறை மாவட்ட கண்காணிப்பாளர் சகாயராஜ் அனைவரையும் வரவேற்றார். 

அதையடுத்து தபால் உறையை தென்மண்டல தலைவர் வெளியிட, அதனை சுப்பிரமணிய சிவாவின் உறவினர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். விழாவில் தபால்துறை ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வத்தலக்குண்டு தபால் நிலைய தலைமை அதிகாரி மணிசேகரன் நன்றி கூறினார்.


Next Story