மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கியவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்உறவினர்களிடம் ஒப்படைப்பு + "||" + Ambulance personnel recover Rs 30,000 from the accident victim

விபத்தில் சிக்கியவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்உறவினர்களிடம் ஒப்படைப்பு

விபத்தில் சிக்கியவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்உறவினர்களிடம் ஒப்படைப்பு
விபத்தில் சிக்கியவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொடுத்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பண்டியன் (வயது 49). இவர், ஒரு மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் இருந்து கோவிந்தநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயமடைந்தவர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தேவபாஸ்கரன், உதவியாளர் பூபதிராஜா ஆகியோர் காயமடைந்த பண்டியனை மீட்டபோது அந்த இடத்தில் ரூ.30 ஆயிரம் பணம், செல்போன், ஆதார், ரேஷன்அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கீழே கிடந்துள்ளன. இதனையடுத்து பாண்டியனை ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். பின்னர் அவரது செல்போனில் இருந்து பாண்டியனின் உறவினர்களை வரவழைத்து பணம் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர். சரியான நேரத்தில் பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த  தேவபாஸ்கரன், பூபதிராஜாவை பொதுமக்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலக ‘லிப்ட்’டில் சிக்கிய ஊழியர்கள்
கலெக்டர் அலுவலக ‘லிப்ட்’டில் சிக்கிய ஊழியர்கள்
2. கோவிலுக்கு சென்ற மோகன்லால்... ஊழியர்கள் சஸ்பெண்ட்
மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் கோவிலுக்கு சென்ற விவகாரத்தில் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
3. தாசில்தார் மீது தாக்குதல்; தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டம்
தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாசில்தாரை தாக்கியதை கண்டித்து தாலுகா அலுவலக ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. 2 மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள்
கடன் தவணை தொகையை கேட்டு வீட்டு வாசலில் நிதி நிறுவன ஊழியர்கள் அமர்ந்தனர்.
5. தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்
தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்