9 யூனியன்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


9 யூனியன்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x
தினத்தந்தி 13 Oct 2021 7:07 PM GMT (Updated: 13 Oct 2021 7:07 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினர் வாகைசூடி உள்ளனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினர் வாகைசூடி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்

நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் விடிய விடிய நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, பாளையங்கோட்டை, மானூர், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், சேரன்மாதேவி, பாப்பாக்குடி ஆகிய 9 பஞ்சாயத்து யூனியன்களில் மொத்தம் 122 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களே வாகை சூடி உள்ளனர். 

அம்பை- ராதாபுரம்

அம்பை யூனியனில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் வாங்கிய ஓட்டுகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு மாரியம்மாள் (காங்கிரஸ்) -1652, 2-வது வார்டு ஆகாஷ் (தி.மு.க) -1294, 3-வது வார்டு கஸ்தூரி (தி.மு.க.) - 1593, 4-வது வார்டு சுடலைமுத்து (தி.மு.க) - 1807, 5-வது வார்டு ஞானகனி (தி.மு.க) - 2330, 6-வது வார்டு சரஸ்வதி (தி.மு.க) -1558, 7-வது வார்டு ராமலட்சுமி (தி.மு.க) -2083, 8-வது வார்டு இசக்கியம்மாள் (தி.மு.க.) -1844, 9-வது வார்டு சிவன் பாண்டியன் (தி.மு.க) -2269.

ராதாபுரம் யூனியன் 1-வது வார்டு மார்க்ரெக்ட் சித்ரா (அ.தி.மு.க.) -1928, 2-வது வார்டு காந்திமதி (சுயே.) -2035, 3-வது வார்டு ஞானசர்மிளா (சுயே.) -1860, 4-வது வார்டு ஜெசி (தி.மு.க) - 1807, 5-வது வார்டு அனிதா ஸ்டெல்லா (தி.மு.க) - 2331, 6-வது வார்டு இளையபெருமாள் (தி.மு.க) -1996, 7-வது வார்டு இசக்கிபாபு (தி.மு.க) -2564, 8-வது வார்டு பரிமளம் (தி.மு.க.) -2379, 9-வது வார்டு முருகன் (தி.மு.க) -2579, 10-வது வார்டு அரிமுத்தரசு (பா.ஜனதா) -1760, 11-வது வார்டு நடராஜன் (தி.மு.க)- 2006, 12-வது வார்டு பாலன் (அ.தி.மு.க) -1362, 13-வது வார்டு மவுலின் (தி.மு.க) -1806, 14-வது வார்டு ஜேசுராஜ் (தி.மு.க) -1753, 15-வது வார்டு அண்டனி ஆல்வின் பிரேமா (தி.மு.க) -2218, 16-வது வார்டு ராஜன் (அ.தி.மு.க) -855, 17-வது வார்டு சவுமியா (தி.மு.க) -2189, 18-வது வார்டு அருணா (தி.மு.க)- 1911.

களக்காடு- சேரன்மாதேவி

களக்காடு யூனியன் 1-வது வார்டு ஜார்ஜ் கோசல் (தி.மு.க.) -1726, 2-வது வார்டு வனிதா (காங்கிரஸ்) -1522, 3-வது வார்டு விசுவாசம் (தி.மு.க.) -2034, 4-வது வார்டு தமிழ்செல்வன் (சுயே.) -1509, 5-வது வார்டு சங்கீதா (சுயே.) -1580, 6-வது வார்டு தளவாய் பாண்டியன் (சுயே.) -1005, 7-வது வார்டு இந்திரா (தி.மு.க) -2684, 8-வது வார்டு விஜயலட்சுமி (தி.மு.க.) -1320, 9-வது வார்டு சத்யா சங்கீதா (சுயே.) -1172.

சேரன்மாதேவி யூனியன் 1-வது வார்டு ஆனந்தலட்சுமி (தி.மு.க.) -2852, 2-வது வார்டு ராகவன் (அ.தி.மு.க) -1748, 3-வது வார்டு பூங்கோதை (தி.மு.க.) -2509, 4-வது வார்டு ராணி (காங்கிரஸ்) -1277, 5-வது வார்டு கனகமணி கஸ்தூரி பாய் (தி.மு.க) -2489.

நாங்குநேரி- பாப்பாக்குடி 

1-வது வார்டு இசக்கிபாண்டி (தி.மு.க.) -1666, 2-வது வார்டு ஸ்டீபன் ஜோசப் ராஜா (சுயே.) -1171, 3-வது வார்டு சங்கரலிங்கம் (அ.தி.மு.க) -1394, 4-வது வார்டு மீனா (தி.மு.க) - 1274, 5-வது வார்டு செந்தூர்பாண்டியன் (அ.தி.மு.க) - 1735, 6-வது வார்டு முத்துலட்சுமி (சுயே.) -1625, 7-வது வார்டு ஆரோக்கியஎட்வின் (தி.மு.க) -1441, 8-வது வார்டு லட்சுமி (அ.தி.மு.க.) -1622, 9-வது வார்டு சவுமியா ராகா (தி.மு.க) -2162, 10-வது வார்டு கிறிஸ்டி (அ.தி.மு.க.) -1398, 11-வது வார்டு முருகேசன் (சுயே.) 856, 12-வது வார்டு ஜெபக்கனி (தி.மு.க) -1960, 13-வது வார்டு செல்வபிரேமா (தி.மு.க) -1729, 14-வது வார்டு செல்வி (அ.தி.மு.க) -1289, 15-வது வார்டு அகஸ்டின் கீதராஜ்மை (தி.மு.க) -1166, 16-வது வார்டு பிரேமா எபனேசர் (தி.மு.க) -1528,

பாப்பாக்குடி யூனியன் 1-வது வார்டு மாரிவண்ணமுத்து (தி.மு.க.) -2377, 2-வது வார்டு சமாதானம் (மா.கம்யூ) -1611, 3-வது வார்டு பனிபுஷ்பம் (தி.மு.க.) -2034, 4-வது வார்டு வளர்மதி (தி.மு.க.) -2632, 5-வது வார்டு சுப்புலட்சுமி (தி.மு.க) -1483, 6-வது வார்டு பிரியா (தி.மு.க) -2526, 7-வது வார்டு செல்வி (தி.மு.க) -1502, 8-வது வார்டு பூங்கோதை (தி.மு.க.) -1887, 9-வது வார்டு சோழமுடி (தி.மு.க.) -1606.

பாளையங்கோட்டை- மானூர்

பாளையங்கோட்டை யூனியன் 1-வது வார்டு முத்துக்குமார் (அ.தி.மு.க.) -1828, 2-வது வார்டு பேச்சியம்மாள் (தி.மு.க) -1409, 3-வது வார்டு குமரேசன் (தி.மு.க.) -2475, 4-வது வார்டு திருப்பதி (தி.மு.க.) -2092, 5-வது வார்டு தெய்வயானை (காங்கிரஸ்) -1479. 6-வது வார்டு தங்கபாண்டியன் (தி.மு.க.) 2195, 7-வது வார்டு பகவதி (தி.மு.க) -3487, 8-வது வார்டு ராஜாராம் (தி.மு.க.) -1179, 9-வது வார்டு சரசுவதி (சுயே.) -2328, 10-வது வார்டு ராமகிருஷ்ணன் (தி.மு.க.) -1744, 11-வது வார்டு நம்பிராஜன் (தி.மு.க.) -1925, 12-வது வார்டு முரளிதரன் (தி.மு.க) -2827, 13-வது வார்டு ராமலட்சுமி (தி.மு.க) -1891, 14-வது வார்டு பூலம்மாள் (தி.மு.க) -2920.

மானூர் யூனியன் 1-வது வார்டு மல்லிகா (தி.மு.க.) -1040, 2-வது வார்டு முத்துப்பாண்டியன் (சுயே.) -1233, 3-வது வார்டு சுதாராணி (தி.மு.க) -2455, 4-வது வார்டு உமையம்மை (சுயே.) - 1582, 5-வது வார்டு உமாதேவி (சுயே.) - 2200, 6-வது வார்டு சண்முக சுந்தரி (தி.மு.க) -3268, 7-வது வார்டு ஜெனட் (சுயே.) -1141, 8-வது வார்டு கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.) -1153, 9-வது வார்டு கலைச்செல்வி (தி.மு.க) -982, 10-வது வார்டு பாலமுருகன் (பா.ஜனதா) -1199, 11-வது வார்டு ரகுமத்நிஷா (தி.மு.க.)- 2596, 12-வது வார்டு சின்னத்துரை (தி.மு.க) -1390, 13-வது வார்டு இன்பராஜ் (தி.மு.க) -1588, 14-வது வார்டு உச்சிமாகாளி (அ.தி.மு.க) -1209, 15-வது வார்டு மாலதி (சுயே.) -967, 16-வது வார்டு சுரேஷ் (தி.மு.க.) -1244, 17-வது வார்டு சுகந்தா தேவி (தி.மு.க) -1166, 18-வது வார்டு நயினார் முகம்மது ஷாபதுல்லா (தி.மு.க.) -2547, 19-வது வார்டு லேகா (தி.மு.க.) -2317, 20-வது வார்டு பாசகுமாரி (தி.மு.க.)- 1141, 21-வது வார்டு மாரி பிரியா (தி.மு.க.) -1490, 22-வது வார்டு முத்துமாரி (தி.மு.க) -2031, 23-வது வார்டு தேவி முப்புடாதி (தி.மு.க.) -2050, 24-வது வார்டு முகமதுகாசீம் (தி.மு.க.) -1603, 25-வது வார்டு முகமது இஸ்மாயில் (தி.மு.க) -2139.

வள்ளியூர்

வள்ளியூர் யூனியன் 1-வது வார்டு ரைகானா செய்யது ஜாவித் (சுயே.) -1579, 2-வது வார்டு பிலிப்ஸா (காங்கிரஸ்) -1339, 3-வது வார்டு பொன்குமார் (தி.மு.க.) -1700, 4-வது வார்டு டெல்சி ஒபிலியா (தி.மு.க.) -2039, 5-வது வார்டு தாய்செல்வி (தி.மு.க.) -2797, 6-வது வார்டு அலெக்ஸ் பால் கோசிஜின் (தி.மு.க.) -1739, 7-வது வார்டு வெங்கடேஷ் தன்ராஜ் (காங்கிரஸ்) -2111, 8-வது வார்டு திவாகரன் (தி.மு.க.) -2599, 9-வது வார்டு சேவியர் செல்வராஜா (தி.மு.க.) -2664, 10-வது வார்டு ஜெயா (தி.மு.க.) 2098, 11-வது வார்டு மகாலட்சுமி (தி.மு.க.) -1804, 12-வது வார்டு மல்லிகா (தி.மு.க) -2219, 13-வது வார்டு பாண்டிதுரை (தி.மு.க) -1629, 14-வது வார்டு சாரதா (அ.தி.மு.க) -1932, 15-வது வார்டு ஜெயலட்சுமி (பா.ஜனதா) -2634, 16-வது வார்டு அனிதா (தி.மு.க.) -1885, 17-வது வார்டு அஜந்தா (தி.மு.க.) -1184.

Next Story