மூதாட்டியிடம் திருட முயன்றவர் கைது
மூதாட்டியிடம் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள இலந்தைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது 75). இவர் முக்கூடலில் இருந்து வீரவநல்லூர் செல்லும் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே சென்று நடந்து கொண்டு இருந்தார்.
அப்போது, வழுதூர் பகுதியைச் சேர்ந்த பிரமு என்ற பேச்சிமுத்து (26) என்பவர் அந்தோணியம்மாள் கூடையில் இருந்த மணிப்பர்சை திருடிக்கொண்டு, அவரை அவதூறாக பேசி மிரட்டினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் வரவும் மணிப்பர்சை கீழே போட்டுவிட்டு சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story