மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறிப்பு + "||" + 13 pound jewelery flush with retired teacher

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறிப்பு

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறிப்பு
உவரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 13 பவுன் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திசையன்விளை:

உவரி அருகே உள்ள கரைசுத்துபுதுரை சேர்ந்த ஐசக் தனராஜ் மனைவி லீலா வசந்தகுமாரி. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் நேற்று மாலை கரைசுத்துபுதூரில் இருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் லீலா வசந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியை கட்டிங் பிளேடால் அறுத்து, பறித்துச் சென்று விட்டனர். 

இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.  மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.