தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 14 Oct 2021 1:04 AM IST (Updated: 14 Oct 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் ேபாக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 38). துப்புரவு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 13 வயது சிறுமிைய பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், துப்புரவு தொழிலாளி காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.12 லட்சம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.
சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் ேபாக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது. 

Next Story