நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழுவை தி.மு.க. கைப்பற்றியது
நெல்லை மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை தி.மு.க. கைப்பற்றியது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்துக்குழுவை தி.மு.க. கைப்பற்றியது.
உள்ளாட்சி தேர்தல்
நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை விடிய விடிய நடந்தது.
மானூர் யூனியனுக்குரிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு தான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. பாளையங்கோட்டை, களக்காடு, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய யூனியன்களில் அதிகாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்தது. மற்ற யூனியன்களில் நள்ளிரவு 2 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது.
வெற்றி பெற்றவர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு செல்வலட்சுமி அமிதாப் (தி.மு.க.), 2-வது வார்டு மகேஷ்குமார் (தி.மு.க.), 3-வது வார்டு கனகராஜ் (தி.மு.க.), 4-வது வார்டு சத்தியவாணிமுத்து (தி.மு.க.), 5-வது வார்டு அருள் பாண்டியன் (தி.மு.க), 6-வது வார்டு சாலமன்டேவிட் (தி.மு.க).
7-வது வார்டு கிருஷ்ணவேணி (தி.மு.க), 8-வது வார்டு கனி தங்கம் (காங்கிரஸ்), 9-வது வார்டு ஜான்ஸ் ரூபா (தி.மு.க.), 10-வது வார்டு லிங்கசாந்தி (தி.மு.க.), 11-வது வார்டு பாஸ்கர் (தி.மு.க), 12-வது வார்டு வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Related Tags :
Next Story