சென்னை ஆடிட்டர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை ஆடிட்டர் கொலை ழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி:
சென்னை வேளாச்சேரியை சேர்ந்தவா் ஜனரஞ்ஜன் பிரதான் (வயது 48) ஆடிட்டர். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் கடத்தப்பட்டு தனது நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட தொழில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜிம் மோகன் மற்றும் கோபி (எ) கோபிநாத் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story