குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை


குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 14 Oct 2021 4:44 PM GMT (Updated: 14 Oct 2021 4:44 PM GMT)

குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகையாக சொத்து வரியில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அரையாண்டு தொடங்கிய 15 நாட்களுக்குள் செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெற விரும்புபவர்கள் 15-ந்தேதிக்குள் (நாளை) சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகையை பெறலாம். 15-ந்தேதிக்கு பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு கூடுதலாக 2 சதவீதம் தனி வட்டி வசூலிக்கப்படும். தனி வட்டி செலுத்துவதை தவிர்க்க 15-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்த பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story