மாவட்ட செய்திகள்

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல் + "||" + Opposition to re-election in Ayyappanthangal panchayat; Independent Candidate Road Stir

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு; சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்.
பூந்தமல்லி,

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் ஜெமீலா பாண்டுரங்கன், சுயேச்சையாக கல்யாணி பெரியநாயகம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து நேற்று சுயேச்சை வேட்பாளர் கல்யாணி, ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெமீலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். அதையேற்று மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை வேட்பாளர் கல்யாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் கல்லூரி முன்பாக குன்றத்தூர்-குமணன்சாவடி பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தான் வெற்றி பெற்றதாக அறிவித்தபிறகு தி.மு.க. வேட்பாளர் கோரிக்கையை ஏற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்தகூடாது என கூறினார்.

இதற்கிடையில் மறுவாக்கு எண்ணிக்கையில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் ஜெமீலா பாண்டுரங்கன் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசு அ.தி.மு.க. சாலை மறியல்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசாக கொடுத்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. தி.மு.க. வேட்பாளரை மிரட்டியதாக புகார் முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. வேட்பாளரை மிரட்டிய புகாரில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. பஸ் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதிய விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி ஊழியர் பலியானார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
5. சாலை அமைக்கும் பணி தீவிரம்
வெம்பக்கோட்டை அருகே சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.