மெரினாவில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்


மெரினாவில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்
x
தினத்தந்தி 14 Oct 2021 5:53 PM GMT (Updated: 14 Oct 2021 5:53 PM GMT)

மெரினாவில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்.

சென்னை,

ஆவடி கோதண்டகிரி விரிவு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை தனுஷ் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் 11 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்து கண்ணகி சிலைக்கு பின்புறம் உள்ள கடலில் இறங்கி குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி தனுஷ் மற்றும் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ஆகாஷ் இருவரும் தத்தளித்தனர். இதைக்கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆகாசை மட்டும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடலில் மாயமான தனுசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் கோதண்டராமன் (16) என்பவரும் தனது நண்பர்களுடன் விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமானார். அவரையும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 மாணவர்கள் கடலில் மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story