கோடம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோடம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
சென்னை,
சென்னை கோடம்பாக்கம், ஆற்காடு சாலை மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரே சாலையின் குறுக்கே பெரிய மரம் ஒன்று நேற்று மாலை திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் பூந்தமல்லியில் இருந்து வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லக்கூடிய வாகனங்கள், செல்ல முடியாமல் சாலையிலேயே நின்றது.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வடபழனி போலீசார் அறுவை எந்திரங்கள் மூலம் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மரம் சாலையில் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Tags :
Next Story