கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுபோல் மாவட்டத்திற்கு மேலும் 40 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுபோல் மாவட்டத்திற்கு மேலும் 40 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை 17 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தலா 1500 வீதம் 25 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதுபோல் 1 வது மண்டலத்தில் மாஸ்கோநகரில் 1,500 பேருக்கு கோவிஷீல்டும், 2-வது மண்டலத்தில் பாரதிநகரில் 1,500 பேருக்கு கோவிஷீல்டும், 3-வது மண்டலத்தில் பி.கே.ஆர்.காலனி பகுதியில் 1,500 பேருக்கு கோவிஷீல்டும், 4-வது மண்டலத்தில் சின்னாண்டிபாளையத்தில் 1,500 பேருக்கு கோவிஷீல்டும் போடப்படுகிறது.
40 ஆயிரத்து 500 டோஸ் வருகை
இதுபோல் புதிய பஸ் நிலையத்தில் 3 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டும், பழைய பஸ் நிலையத்தில் 3 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டும், ரெயில் நிலையத்தில் 2,500 பேருக்கு கோவிஷீல்டும் செலுத்தப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
இதற்கிடையே மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் மேலும் 40 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்தது. இதில் 36 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டும், கோவேக்சின் 4 ஆயிரம் டோசும் அடங்கும். இந்த தடுப்பூசிகள் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-------
Related Tags :
Next Story