மட்டப்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


மட்டப்பாறையில் நெல் கொள்முதல் நிலையம்  இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Oct 2021 5:57 PM IST (Updated: 15 Oct 2021 5:57 PM IST)
t-max-icont-min-icon

மட்டப்பாறையில் நெல் கொள்முதல் நிலையத்தை இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மட்டப்பாறையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மட்டப்பாறையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. 
இதற்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன், மட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ராஜ்குமார், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story