குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை


குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை
x
தினத்தந்தி 15 Oct 2021 8:10 PM IST (Updated: 16 Oct 2021 1:53 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய் கின்றன.

 இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார்.

இந்த நிலையில் முள்ளி, கெத்தை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டமாக வெளியேறியது. அதில் இருந்து ஆண் காட்டு யானை ஒன்று பிரிந்து வந்தது.

அந்த யானை நேற்று சாம்ராஜ் எஸ்டேட் பகுதி வழியாக குன்னூர் அருகே தூதுர்மட்டம் மகாலிங்கா காலனியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சுற்றி திரிந்தது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

சிறிது நேரம் அந்த பகுதியில் உலா வந்த காட்டு யானை மானார் வனப்பகுதிக்குள் சென்றது. 

ஆனாலும் அந்த காட்டு யானை இரவு நேரத்தில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வரும் அபாயம் உள்ளது. 
எனவே வனத்துறையினர் காட்டு யானையை கண்காணித்து வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story