ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மோடி உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மோடி உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2021 10:15 PM IST (Updated: 15 Oct 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 5 விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்தியாநாத் ஆகியோர் உருவப்படங்களை எரித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். .

திருவாரூர்:

ஆர்ப்பாட்டம் 
உத்தரபிரதேசத்தில் மத்தியமந்திரி மகன் சென்ற கார் விவசாயிகள் போராட்டத்தில் புகுந்ததால் 5 பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பேராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர்  பழைய பஸ் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலியபெருமாள், பாஸ்கர், மோகன், சண்முகசுந்தரம், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
50 பேர் கைது 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மந்திரியை  காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு துணைபோவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியாநாத் ஆகியோர் உருவப்படங்களை தீயிட்டு எரித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது திருவாரூர் டவுன் போலீசார் தீயிட்டு எரித்த உருவப்படத்தை தண்ணீர்  ஊற்றி அணைத்தனர். இதில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story