சிதம்பரத்தில் பிளஸ்-2 மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் கைது


சிதம்பரத்தில் பிளஸ்-2 மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2021 10:45 PM IST (Updated: 15 Oct 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் பிளஸ்-2 மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம், 

வீடியோ வைரல்

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர் வகுப்பறையில் பிளஸ்-2 படிக்கும் கடவாச்சேரி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரை சரியாக படிக்கவில்லை என்றும், பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும் கூறி பிரம்பால் அடித்து, காலால் உதைப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. 
இந்த காட்சியை பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதும் தெரியவந்தது. 

பணியிடை நீக்கம்

இதற்கிடையே ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவர் கொடுத்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.
இதற்கிடையே மாணவரை தாக்கிய ஆசிரியர் சுப்பிரமணியனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story