பாகாயத்தில் அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு


பாகாயத்தில் அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2021 10:58 PM IST (Updated: 15 Oct 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

பாகாயத்தில் அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர்

பாகாயத்தில் அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவமனை ஊழியர்

வேலூர், பாகாயம் கே.சி.சாமிநகர், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பினர். சாமிநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை ஹெல்மெட் அணிந்த 2 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்தனர். 

நகை பறிப்பு

ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது அவர்களில் ஒருவன் திடீரென உமாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்தான். இதனால் உமா அதிர்ச்சி அடைந்த உமா. சுதாரித்து கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வருவதற்குள் இருவரும் அங்கிருந்து மின்னல்வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story