ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல்; 2 பேர் கைது
கண்டமனூரில் ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடமலைக்குண்டு:
கண்டமனூர் போலீசார் நேற்று கணேசபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டமனூர் நோக்கி வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில், அந்த ஆட்டோவில் சாக்குப்பையில் வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் அம்மாபட்டியை சேர்ந்த ஜெகன் (வயது 33), தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் அதில் கடத்தி வந்த 596 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் வருசநாடு போலீசார் வைகைநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தர்மராஜபுரம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்த பிரபு (35), செல்வராஜ் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story