தேசிய கொடி நிறங்களில் ஜொலித்த வேலூர் கோட்டை


தேசிய கொடி நிறங்களில் ஜொலித்த வேலூர் கோட்டை
x
தினத்தந்தி 15 Oct 2021 11:08 PM IST (Updated: 15 Oct 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தேசிய கொடி நிறங்களில் ஜொலித்த வேலூர் கோட்டை

வேலூர்

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 100 கோடி பேரை நெருங்கி உள்ளது. இதை இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
இதற்கான நாடு முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் தேசிய கொடியில் இடம் பெற்றுள்ள நிறங்களில் மின்விளக்குகள் ஒளிரவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த இடங்களில் வேலூர் கோட்டையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் கோட்டையில் தேசிய கொடி நிறங்களில் மின்விளக்குள் அமைக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது. இது கோட்டை அகழியில் பிரதிபலித்தது. தண்ணீரில் ஜொலிக்கும் கோட்டையின் அழகை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.


Next Story