உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முந்திரி வியாபாரி


உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முந்திரி வியாபாரி
x
தினத்தந்தி 15 Oct 2021 11:16 PM IST (Updated: 15 Oct 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வீ்ட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முந்திரி வியாபாரி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

உளுந்தூர்பேட்டை

முந்திரி வியாபாரி

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமி பாலன்(வயது 37). இவர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மீரா. இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். 
மது குடிக்கும் பழக்கம் உள்ள பூமிபாலன் சம்பவத்தன்று அவரது வீ்ட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் இதுபற்றி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பூமிபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் என்ன வென்று தெரியவல்லை?
பூமி பாலனின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர் ரேணுகா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை அறிக்கை

அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் பூமி நாதன் இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
தனது வீட்டிலேயே முந்திரி வியாபாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் செங்குறிச்சி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story