குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2021 11:38 PM IST (Updated: 15 Oct 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.

அறந்தாங்கி, 
ஊற்று குளம்
அறந்தாங்கி அருகே மூக்குடி பொற்குடையார் கோவில் அருகே 25 அடி ஆழமுள்ள ஊற்று குளம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் மாங்குடியை சேர்ந்த அஜித் (வயது 21), அறந்தாங்கியை சேர்ந்த விக்கி (29) ஆகியோர் நேற்று அந்த குளத்திற்கு சென்று உள்ளனர். இதில் அஜித் குளத்தில் குதித்தார். விக்கி கரையின் மேல் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில், அஜித் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பீதி அடைந்த விக்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
வாலிபர் பலி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் ஊற்று குளத்திற்குள் இறங்கி  தேடியதில் சகதியில் சிக்கி அஜித் இறந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அறந்தாங்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story