பா.ஜ.க.வினர் சாலை மறியல்


பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Oct 2021 6:30 PM GMT (Updated: 15 Oct 2021 6:30 PM GMT)

பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை வரவேற்கும் விதமாக கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில், கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், சாலையின் ஓரமாக நின்று இனிப்பு வழங்குமாறு பா.ஜ.க.வினரிடம் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் ஆர்.வி.எஸ்.செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க.வினர் மனோகரா கார்னர் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பா.ஜ.க.வினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பா.ஜ.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story